Domain name என்றால் என்ன? | Domain Name Meaning in Tamil

Domain name என்றால் என்ன?(Domain Name Meaning in Tamil), Domain Name வாங்குவது எப்படி? Subdomain என்றால் என்ன? என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

நீங்கள் ஒரு Website அல்லது Blog துவங்க உங்களுக்கு Domain name என்றால் என்ன?, Domain name எவ்வாறு வேலை செய்கின்றது?, Domain name எங்கிருந்து வாங்குவது? என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

Domain Name Meaning in Tamil
Domain Name Meaning in Tamil

Domain name என்றால் என்ன? (Domain Name Meaning in Tamil)

Domain Name (DNS – Domain Naming System) என்பது உங்கள் வெப்சைட்டை இணையதளத்தில் identify செய்ய பயன்படும் Address ஆகும். ஒவ்வொரு வெப்சைட்டுக்கு தனித்துவமான(Unique) Domain Name இருக்கும்.

உதாரணத்திற்கு memustamil.com என்பது நமது வெப்சைட்டின் Domain Name ஆகும். Domain Name-ஐ உங்கள் பிரவுசரில் URL Bar- இல் உள்ளிட்டு நீங்கள் வெப்சைட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு வெப்சைட்டை பயன்படுத்த அதன் IP Address அறிந்திருக்க வேண்டும். இந்த IP Address என்பது 192.158.21.38 இவ்வாறு எண்களைக் கொண்டிருக்கும்.

இதனை நினைவில் வைத்து வெப்சைட்டை பயன்படுத்துவது என்பது கடினமாக இருக்கும். இந்த சிக்கலைப் போக்கவே Domain Name பயன்படுகின்றது. Domain Name எழுத்து வடிவில் இருப்பதால் இதனை நினைவில் வைத்துக்கொள்வது மிக சுலபமாகிறது.

Domain Name எப்படி வேலை செய்கிறது? How Domain Name Works in Tamil?

ஒரு Web Hosting என்பது அதிவேக Server உள்ளடக்கியது என்பதை Web Hosting என்றால் என்ன? என்று இந்த பதிவில் பார்த்தோம். ஒவ்வொரு Web Hosting Sever -க்கும் ஒரு IP Address என்ற தனித்துவமான அட்ரஸ் வழங்கப்பட்டிருக்கும்.

Domain Name உடன் இந்த IP Address இணைக்கப்படுகின்றது. பயனாளர்கள் Domain Name-ஐ பிரவுசரில் உள்ளிடும் போது, அந்த Domain Name IP Address-ஐ Point செய்கிறது.

இவ்வாறு பயனாளருக்கு சர்வரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வெப்சைடை பயன்படுத்த முடிகிறது. இவ்வாறு Domain Name வேலை செய்கின்றது.

Domain Name மற்றும் Web Hosting  இடையேயான வேறுபாடு என்ன? என்று அறிய லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Domain Name வகைகள் என்ன? Types of Domain Name in Tamil

Domain Name-ஐ அதன் எக்ஸ்டன்ஷன் (Extension) அடிப்படையில் சில பிரிவுகளாக பிரிக்கிறோம். இதில் .com Domain Nameஅதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. Domain Name வகைகள் என்ன என்பதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Top Level Domain – TLD என்றால் என்ன?

ஒரு Domain Name-இல் . (dot) இருக்கு பிறகு வரக்கூடியதை Domain Extension என்கிறோம். .com, .net, .org, .biz, .info, .agency Top Level Domain – TLD என்கிறோம்(TLD Domain Name meaning in Tamil). இதில் .com உலகம் முழுவதும் பலரால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

Country Code Top Level Domain – ccTLD என்றால் என்ன?

Country Code Top Level Domain – ccTLD ( ccTLD Domain Name meaning in Tamil) என்பது ஒரு நாட்டின் எக்ஸ்டென்ஷன் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு .in – India, .uk – United Kingdom, .ge – Germany என்பது அந்தந்த நாட்டின் Country Code Top Level Domain – ccTLD ஆகும்.

Sponsored Top Level Domain – sTLD என்றால் என்ன?

Sponsored Top Level Domain – sTLD(sLTD Domain Name meaning in Tamil) வகை Domain Name Extension குறிப்பிட்ட சில நிறுவனங்களை குறிக்கின்றது.

உதாரணத்திற்கு .edu என்கிற sTLD கல்வி நிறுவனங்களை குறிக்கிறது. அதேபோல .gov அரசாங்க வலைத்தளங்களை குறிக்கிறது. மேலும் .mil இராணுவத்தை வலைத்தளங்களை குறிக்கிறது.

Subdomain என்றால் என்ன? What is Subdomain Name meaning in Tamil?

ஒரு Domain Name-ஐ தனித்தனி பகுதிகளாகப் பிரிப்பது Subdomain எனப்படுகின்றது (Subdomain Name Meaning in Tamil). இந்தப் பிரிக்கப்பட்ட ஒரு Subdomain ஒரு தனி Domain Name போன்று வேலை செய்கின்றது.

அதாவது ஒரு Domain Name- இல் பல Subdomain- களை உருவாக்கி அதில் நீங்கள் விரும்பினால் தனித்தனி வெப்சைட்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு memustamil.com என்ற Domain Name ஒரு தமிழ் Blog. நான் விரும்பினால் store.memustamil.com என்கின்ற Subdomain-இல் வேறு ஒரு வெப்சைட் உருவாக்க முடியும்.

Domain Name மற்றும் URL-க்கு இடையேயான வேறுபாடு என்ன?

URL Uniform Resource Locator மற்றும் Domain Name இரண்டுமே வெப்சைட்டின் அட்ரஸை குறிக்கிறது இரண்டுக்குமான வேறுபாடு என்ன என்பதை கீழே காணலாம்.

URL என்பது Complete Web Address . Domain Name என்பது உங்கள் URL இன் ஒரு சிறிய பகுதி. URL என்பது உங்கள் வெப்சைட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட Web Page-ஐ குறிக்கும். Domain Name உங்கள் முழு Website- ஐ குறிக்கிறது.

Domain Name வாங்குவது எப்படி? How to Buy Domain Name in Tamil?

நீங்கள் Domain Name வாங்க இணையத்தளத்தில் பல Domain Registrars உள்ளனர். அதில் நீங்கள் ICANN(Internet Corporation for Assigned Names and Numbers) certified நிறுவனங்களிடம் Domain வாங்குவது சிறந்தது.

Top Domain Registrars

முடிவுரை

இந்தப் பதிவில் நாம் Domain Name என்றால் என்ன? டொமைன் நேம் எவ்வாறு வேலை செய்கிறது? நம்மை எங்கு இருந்தது என்பதை பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!

மேலும் படிக்க:

Web Hosting என்றால் என்ன? Web Hosting எங்கிருந்து வாங்குவது?

Domain Privacy என்றால் என்ன? அதை வாங்குவது அவசியமா?

Domain Name வாங்கும்போது உங்களுடைய முகவரி, மொபைல் எண், Email ID போன்றவற்றை பதிவிட வேண்டும். நீங்கள் பதிவிடும் இந்த விவரங்கள் Whois.com என்ற வலைத்தளத்தில் அனைவரின் பார்வைக்கு வெளியிடப்படும். நீங்கள் உங்கள் முகவரி, மொபைல் எண், Email ID போன்றவற்றை Whois Directory-இல் இருந்து மறைக்க விரும்பினால் நீங்கள் Domain Privacy ஆப்ஷனை வாங்கிக்கொள்ளலாம்.

நான் ஒன்றுக்கும் மேற்பட்ட Domain Name- ஐ வாங்க முடியுமா?

ஆம். நீங்கள் எவ்வளவு Domain Name வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் வாங்கிய Domain Name – ஐ விற்பனை செய்யலாமா?

ஆம். உங்கள் பெயரில் வாங்கிய Domain Name- ஐ எப்போது வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு விற்பனை செய்யலாம். Custom Branded Domain Name-கள் பல லட்சம் ரூபாய் வரை விலை போகின்றது. உங்கள் Domain Name விற்பனை செய்ய Flippa.com -ஐ பயன்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.