Web Hosting in Tamil – Web Hosting என்றால் என்ன? எந்த Web Hosting வாங்குவது?

உங்கள் Website- ஐ  இணையதளத்தில் காட்ட Web Hosting தேவைப்படுகின்றது.  இந்தப் பதிவில் Web Hosting in Tamil – Web Hosting என்றால் என்ன?  Web Hosting இன் வகைகள்? Web Hosting- இன் Features என்ன? Web Hosting மற்றும் Domain இடையேயான வேறுபாடுகள் என்ன? சிறந்த Web Hosting எது? என்பது போன்ற உங்களது கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த  விரிவாக காணலாம். 

ஒரு வெப்சைட்டை தயாரித்து அதனை இணையதளத்தில்  வெளியிடுவது Web Hosting மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நீங்கள் ஒரு Blog துவங்க விரும்பினாலோ, Ecommerce Store, Business Website  போன்ற எந்த ஒரு Website  துவங்க விரும்பினாலும் Web Hosting  அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

Web Hosting in Tamil
Web Hosting in Tamil

Web Hosting என்றால் என்ன? – What is Web Hosting Meaning in Tamil?

Web Hosting Meaning in Tamil என்பதை பற்றி விரிவாக பார்கலாம் . ஒரு Website தயாரிக்கும்போது அதில் பயன்படுத்தப்படும் Photos , Videos, HTML போன்றவற்றை நாம் ஒரு இடத்தில் சேமித்து வைக்கின்றோம்.

நாம் சேமித்து வைக்கக்கூடிய வெப்சைட்டை இணையதளத்தில் அனைவரும் பயன்படுத்த அதனை இணையதள வசதியுடன் கூடிய  அதிவேக Server உடன்  இணைக்க வேண்டும்.  இவ்வாறான அதிவேக சர்வர்களில் நமது வெப்சைட்டை பதிவேற்றம் (Upload) செய்ய பயன்படுவதே Web Hosting. 

பொதுவாக இந்த அதிவேக சர்வர்கள் விலை உயர்ந்ததாக  இருக்கும். இதனை பராமரிக்கக் கூடிய செலவும் அதிகமாக இருக்கும். இவ்வாரான சர்வர்களை வாங்கி பராமரித்து,  மக்கள்  எளிதாக பயன்படுத்த  வழங்கப்படும் சேவையே Web Hosting எனப்படுகின்றது. 

மேலும் படிக்க:

Domain Name என்றால் என்ன? Domain Name எப்படி வேலை செய்கிறது Domain Name எங்கு வாங்குவது?

Web Hosting-இன்  வகைகள்? Types of Web Hosting in Tamil

Web Hosting இன் வகைகள் (Types of Web Hosting in Tamil)  அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப பல வகையாக பிரிக்கப்படுகிறது.  அதில் அதிகமாக பயன்படுத்தப்படும் 4 வகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். 

நான்கு வகையான Web Hosting சேவைகள்:

  • Shared Hosting
  • Dedicated Server Hosting 
  • VPS Hosting
  • Cloud Hosting

Shared Hosting – Shared Hosting என்றால் என்ன?

ஒரே சர்வரில் பல வெப்சைட்டுகளை Hosting செய்வது Shared Hosting எனப்படுகின்றது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வெப்சைட்கள் ஒரே சர்வரில் உள்ள RAM, Storage, CPU போன்றவற்றை பயன்படுத்துகின்றது. 

உதாரணத்திற்கு  Server  ஒரு  அறை(Room) என வைத்துக்கொள்ளுங்கள், அந்த அறையில்  தங்கி இருப்பவர்களை Websites என   வைத்துக்கொள்ளுங்கள்,  இவ்வாறு ஒரே அறையை( அதாவது Server) பயன்படுத்தும்பொழுது   தனிநபர் மீதான செலவு குறைக்கப்படுகின்றது. இதனாலேயே Shared Hosting மிகக் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றது. 

புதிய Blog அல்லது  Website  தொடங்குபவர்களுக்கும், சிறு தொழில் தொடங்குவதற்கும் Shared Hosting பயனுள்ளதாக இருக்கும்.  இந்த வகை  Hosting இங்கு பயன்படுத்த எந்த ஒரு தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge)  தேவையில்லை, இதனை சிரமமின்றி அனைவரும் பயன்படுத்த முடியும்.

HostingTypeMonthly Visitors (Approx)Monthly Price (Approx)
Shared Hosting 10,000₹79/Month

Dedicated Hosting – Dedicated Hosting என்றால் என்ன?

Dedicated Hosting-இல் உங்களுக்கென தனியாக ஒரு Server ஒதுக்கப்படும்,  அந்த சர்வர் முழுவதையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் பயன்படுத்த முடியும்.

ஒரு சர்வர் முழுவதையும் நீங்களே பயன்படுத்துவதால் இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். 

 பொதுவாக இந்த Hosting அதிகமான பார்வையாளர்களை கொண்ட  வலைத்தளங்களான  Amazon, Flipkart முதலிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

Dedicated Hosting  பயன்படுத்துவது பல நன்மைகளைத் உள்ளன. அதில் ஒன்று உங்கள் வலைதளத்தில் வேகம் அதிகரிக்கும்,  Server  இன் முழு கட்டுப்பாடு உங்களிடம் இருப்பதால், நீங்கள் உங்களுக்குத் தேவையான Operating System Installation, Server Setting and Configuration  முதலியவற்றை செய்துகொள்ள முடியும்.

HostingTypeMonthly Visitors (Approx)Monthly Price (Approx)
Dedicated Hosting 9,00,000+₹8500/Month

VPS Hosting (Virtual Private Server) – VPS Hosting என்றால் என்ன?

VPS Hosting என்பது ஒரு Dedicated Server-ஐ சிறிய Virtual Server-களாக பிரிக்கப்படுகின்றது.  இது ஒரு சிறிய அளவிலான டெடிகேட்டட் சர்வர் போல வேலை செய்கின்றது.

 Shared Hosting-உடன் ஒப்பிடும் போது இதன் Speed and Performance பல மடங்கு உயர்வாக இருக்கின்றது. இந்த வகையான சர்வர்களிலும் நீங்கள் Operating System Install  செய்ய முடியும்.

இந்த வகையான Dedicated Hosting-ஐ விட சிறந்ததாக இல்லாவிட்டாலும்  கணிசமான அளவு பார்வையாளர்களை மிகச் சிறப்பாக  கையாள உதவுகிறது.

HostingTypeMonthly Visitors (Approx)Monthly Price (Approx)
VPS Hosting 3,00,000+₹1200/Month

Cloud Hosting – Cloud Hosting என்றால் என்ன?

Cloud Hosting என்பது  குறிப்பிட்ட ஒரு சர்வரை (Server) பயன்படுத்துவது கிடையாது, இது பல சர்வர்களின் தொகுப்பாகும்.  அதாவது நீங்கள்  பதிவேற்றம் செய்யும் உங்களது Website குறிப்பிட்ட ஒரு சர்வர்  அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட Virtual மற்றும் Physical சர்வர்களில் Hosting செய்யப்படுகின்றது. 

இந்த வகையான  ஹோஸ்டிங் எவ்வளவு பார்வையாளர்களால் உங்கள் வலைதளத்தில் வந்தாலும் அதனை கையாளும்  விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையான போஸ்டிங் வில் நீங்கள் Dedicated Hosting  மற்றும் VPS Hosting முதலியவற்றைப் போல Server Configuration முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.  இதனை பயன்படுத்த   தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge) அவசியமில்லை.

 இந்தவகையான ஹோஸ்டிங்  மிக அதிகமான பார்வையாளர்களை கொண்ட வெப்சைட்டுகள் பயன்படுத்துகின்றன. 

HostingTypeMonthly Visitors (Approx)Monthly Price (Approx)
Cloud Hosting 7,00,000+₹1500/Month

Web Hosting எவ்வாறு வேலை செய்கிறது? Working of Web Hosting in Tamil

பொதுவாக வெப்சைட் என்பது HTML,CSS, JavaScript, Images, Videos போன்றவற்றை உள்ளடக்கியது. இவற்றை நாம் Hosting Server-இல் பதிவேற்றம் செய்கின்றோம். பதிவேற்றம் செய்த Website ஆனது Domain Name (Website Address) உடன்  இணைக்கின்றோம் (DNS).

ஒரு பயனாளர்(User)  தனது Browser உங்களது Domain Name (Website Address)   உள்ளிடுகிறார்,  Domain Name உங்கள் சர்வரை குறிக்கின்றது இதன் மூலம் உங்கள் வெப்சைட்டை பயனாளர் பயன்படுத்த முடிகின்றது.  இவ்வாறு Web Hosting in Tamil வேலை செய்கின்றது. 

Web Hosting Features எவை? Features of Web Hosting in Tamil

 Web Hosting வாங்கும் போது இந்த  முக்கியமான Features கவனத்தில் கொள்ள வேண்டும்.  நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய Features என்னென்ன என்பதை பற்றி தெளிவாக காணலாம்.

Bandwidth

Bandwidth என்பது பயனர்களுக்கு(User) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாற்றக்கூடிய தரவுகளின்(Data Transfer) அளவு. High Bandwidth உள்ள வெப்சைட்கள் Low Bandwidth வெப்சைட்களை விட  அதிக வேகமாக இருக்கும். எனவே Hosting  வாங்கும் போது  Bandwidth அதிகமாக  இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Disk Space

Disk Space என்பது சர்வரில்  உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள Storage-ஐ  குறிக்கின்றது.  உங்களிடம் எவ்வளவு Storage பேசியுள்ளது அந்த அளவு பெரிய Website நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த Disk Space என்பது SSD (Solid State Drives) இருப்பது மிகச் சிறந்தது. இது HDD Storage(Hard Disk Drives) காட்டிலும் பல மடங்கு வேகமாக இயங்குகிறது.

Uptime

உங்கள் வெப்சைட் அருமையாக வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தை Uptime என்கின்றோம் உங்கள் வெப்சைட் வேலை செய்யாது இருக்கும் நேரத்தை Downtime என்கிறோம். நீங்கள் வாங்கக்கூடிய Hosting- இன் Uptime 99.99% இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Customer service

 ஒரு Web Hosting நீங்கள்  பயன்படுத்தும்போது உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள்,  சிரமங்களை  போக்க ஒரு சிறந்த 24*7 வாடிக்கையாளர் சேவை(Customer service)  மற்றும்  விரைவாக உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய Hosting- ஐ தேர்வு செய்ய வேண்டும்.

SSL Certificate

SSL Certificate உள்ள வெப்சைட்டுகளுக்கு Google  போன்ற Search Engine  முக்கியத்துவம் அளிக்கின்றது. உங்கள் வெப்சைட்டில் உள்ள டேட்டாவை பாதுகாத்துக்கொள்ள SSL Certificate மிக முக்கியமாகும்.  பெரும்பாலான Hosting   நிறுவனங்கள் SSL Certificate- ஐ வருடாந்திர திட்டங்களுடன்( Yearly Packages) இலவசமாகவே வழங்குகின்றது.

Email

உங்கள் வெப்சைடுக்கு Domain Name பொருந்திய Email ID தேவைப்படும்.

உதாரணத்திற்கு memustamil.com என்ற  Domain – admin@memustamil.com  என்ற  Email ID-ஐ உருவாக்கிக்கொள்ள முடியும். 

எனவே Email Service இலவசமாக வழங்கும் Hosting-ஐ  நீங்கள் தேர்வு செய்தால் உங்கள் Email Service என்று தனியாக பணம் செலுத்தத் தேவையில்லை. 

Domain Name மற்றும் Web Hosting  இடையேயான வேறுபாடு என்ன? Difference Between Domain Name and Web Hosting in Tamil

Domain Name என்பது உங்கள் வெப்சைட்டின் பெயர்  அல்லது அட்ரசை குறிக்கின்றது. Web Hosting in Tamil  என்பது உங்கள் வெப்சைட் பதிவேற்றம் செய்யப்பட்ட சர்வரை குறிக்கின்றது.

 எளிமையாக கூற வேண்டுமென்றால் Domain Name என்பது உங்கள் வீட்டின் முகவரி. Web Hosting என்பது உங்களுடைய  வீட்டைப் போன்றது.

எந்த Web Hosting வாங்குவது?

நான் என்னுடைய வெப்சைட்டுக்கு பயன்படுத்தும் ஹோஸ்டிங் Hostinger இது நியாயமான விலையில் சிறந்த சேவையை வழங்க கூடிய ஒரு சிறந்த ஹோஸ்டிங் கம்பெனி ஆகும். மேலே நாம் கண்ட SSD Storage, Uptime 99.99%, Email Service, Unlimited Bandwidth, Free SSL போன்றவற்றை நீங்கள் பெறலாம்.

நீங்கள் ஒருவருட திட்டங்கள் உடனும் Hostinger-இல் இலவசமாக ஒரு வருடத்திற்கு ஒரு Domain Name இலவசமாக வழங்குகிறது. Hostinger– இல் Shared Hosting ₹79/Month ரூபாய் முதல் கிடைக்கின்றது. நீங்கள் அதனை Check செய்து பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.