Freelancer Meaning in Tamil – Freelancing என்றால் என்ன? Freelancing வழியாக ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? Freelancing துவங்குவது எப்படி?
Freelancing மாணவர்கள், குடும்பத் தலைவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் செய்யலாம். இதனைப்பற்றி கீழே விரிவாகக் காணலாம்.
குறிப்புச்சட்டகம்
Freelancer meaning in Tamil – Freelancing என்றால் என்ன?
Freelancer meaning in Tamil – பகுதி நேர வேலை என்பது ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத்திற்காக அல்லது தனி நபருக்காக வேலை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவது. Freelancing செய்பவரை Freelancer என்று அழைக்கிறோம்.
இந்தியாவில் சுமார் 1.5 கோடிக்கு அதிகமான பிரீலன்சர்கள் தங்களது சேவைகளை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.
Freelancing செய்ய நீங்கள் ஒரு நிறுவனம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது நீங்கள் தனிநபராகவே Freelancing துவங்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நீங்கள் பிரீலன்ஸிங் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 15$ (₹ 1100) முதல் 100$ (₹ 7200) வரை உங்களது திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.
Freelancing நன்மைகள்?
இந்தப் பெரும் தொற்று காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த அசாதாரண சூழ்நிலையில், வீட்டில் இருந்தபடியே வேலை செய்து பணம் சம்பாதிக்க மிகச்சிறந்த வழி பிரீலன்ஸிங்.
ஒரு Freeelancer எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை செய்யாது தனித்து வேலை செய்கிறார். இதன் மூலம் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
உங்கள் உழைப்புக்கான முழுப்பயனும் உங்களுக்கே கிடைக்கும் இது Freelancing மிகச்சிறந்த பகுதி.
எந்த வேலைகளை Freelancing செய்யலாம்?
இன்றைய காலகட்டத்தில் பிரீலன்ஸிங்கில் logo design, web development, app development வரை நீங்கள் அனைத்து விதமான வேலைகளையும் காணலாம்.
பிரீலன்ஸிங்கில் சிறந்து விளங்கும் துறைகள்:
- இணைய மேம்பாடு (Web development)
- கிராபிக்ஸ் வடிவமைப்பு (Graphics design)
- உள்ளடக்க எழுதுதல் (Content writing)
- தேடுபொறி உகப்பாக்கம் (Search Engine Optimization)
- ஆலோசனை சேவைகள் (Consultancy)
- காணொளி தொகுப்பாக்கம் (Video editing)
- கணக்கு சரிபார்த்தல்(Accounting)
- சமூகவலைத்தள சந்தைப்படுத்துதல் (Social Media Marketing)
இந்தத் துறைகள் மட்டும் அல்லாது நீங்கள் எந்தத் துறையில் உங்கள் திறமை இருந்தாலும் அதனையும் நீங்கள் பிரீலன்ஸிங் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சேவையை வழங்க முடியும்.
உங்கள் துறையில் மக்கள் என் சேவைகள் வழங்குகிறார்கள் என்பதை நீங்கள் பிரீலன்ஸிங் தளங்களில் சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
பிரீலான்ஸிங்கின் எதிர்காலம்
இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களது வேலைகளை ஃப்ரீலான்ஸர்களை கொண்டு செய்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், ஊழியர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் கொடுப்பதைவிட ஒப்பந்த அடிப்படையில் பிரீலன்சர்களை அணுகி அவர்கள் மூலம் தங்களது வேலைகளை செய்துகொள்கின்றனர்.
இது இனிவரும் காலங்களில் மென்மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீலான்ஸிங் துவங்குவது எப்படி?
நீங்கள் பிரீலன்ஸிங் தொடங்க விரும்பினால் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை உங்களது தனித்திறமையை கண்டறிவது. அந்தத் திறமையை கற்றுக்கொள்ள நீங்கள் நாள் தோறும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தி எந்த ஒரு கலையையும் கற்றுக் கொள்ள முடியும். கூகுள், யூடியூப் போன்றவற்றை பயன்படுத்தி உங்களது தனித்திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
பிரீலான்ஸிங் வேலை பெறுவது எப்படி?
நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டபின் நீங்கள் அந்தத் திறமையை பயன்படுத்தி வேலைகளை பெற்று நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.
இதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்களது சேவைகளை Fiverr, Upwork, Freelancer போன்ற பிரீலன்ஸிங் தலங்களில் பதிவு செய்து அதன் வழியாக வாடிக்கையாளர்களை அணுகலாம்.
உங்களது சேவைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலமாகவும் நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களை அணுகலாம்.
Freelancing முதல் வாடிக்கையாளரை பெறுவது எப்படி?
பிரீலன்ஸிங் பொருத்தவரை முதல் வாடிக்கையாளர் பெறுவது கடினமானதாக தோன்றலாம். உங்கள் முதல் வாடிக்கையாளரை நீங்கள் குறுகிய காலத்தில் பெற கீழுள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
- ஒரு வாடிக்கையாளரை அணுகும் போது நீங்கள் அவர்களுக்காக என்ன செய்து தரப் போகிறீர்கள் என்பதை விரிவாக எழுத வேண்டும். பலர் இதனை செய்வதில்லை அதனாலேயே அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுகின்றது.
- நீங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு உங்கள் சேவைகளை வழங்கி உங்கள் முதல் வாடிக்கையாளரை அவர்கள் மூலம் பெறலாம்.
- சமூக வலைத்தளங்களில் உங்கள் சேவைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, அதன் மூலம் நீங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களை பெற முடியும்.
- LinkedIn போன்ற வெப்சைட்டுகளில் உங்கள் கணக்கைத் துவங்கி உங்கள் சேவைகளை அதில் பதிவிட்டு அதன் மூலம் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை பெற முடியும்.
Freelancing திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி?
நீங்கள் Freelancing திறமையை வளர்த்துக்கொள்ள உங்கள் துறை சார்ந்த அறிவை நாள்தோறும் வளர்த்துக் கொள்வது அவசியம்.
நீங்கள் எந்த ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றாலும் அந்தத் துறை சார்ந்த வீடியோக்கள் யூடியூபில் இலவசமாக கிடைக்கின்றது அதனைப் பயன்படுத்தி உங்கள் அறிவை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
முடிவுரை – Freelancer meaning in Tamil
நாம் இந்த கட்டுரையில் Freelancer meaning in Tamil என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். பிரீலன்ஸிங் என்பது எந்தவொரு முதலீடும் இல்லாமல் துவங்க மிகச் சிறந்த ஒரு வழியாகும். இதனை நீங்கள் அனைவரும் முயற்சித்து பார்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய வழிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளுங்கள்.
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? 10 சிறந்த வழிகள்
மாணவர்கள், குடும்பத் தலைவிகள், வேலைக்கு செல்பவர்கள் பிரீலன்ஸிங் செய்யலாமா?
ஆம். Freelancing மாணவர்களுக்கு பகுதி நேர வேலை செய்து பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி. குடும்பத் தலைவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் பிரீலன்ஸிங் செய்யலாம்.
Freelancing மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
Freelancing மூலம் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய அளவு உங்கள் தனித் திறமையையும் உழைப்பையும் பொருத்தே அமைகின்றது. இது நபருக்கு நபர் மாறுபடலாம்.
Freelancing சேவைகளின் விலை நிர்ணயம் செய்வது எப்படி?
உங்கள் Freelancing சேவைகளின் விலையை ஆரம்பத்தில் மற்றவர்களைவிட சிறிதளவு குறைவாகவே வைக்க வேண்டும். பின்னர் நீங்கள் அதனை உங்கள் சேவையின் தரத்தை பொறுத்து அதிகரித்துக்கொள்ளலாம்.
Freelancing செய்ய ஆங்கில அறிவு கட்டாயமா?
நீங்கள் பன்னாட்டு வாடிக்கையாளர்களுடன் உரையாட ஆங்கிலம் உறுதுணையாக இருக்கும். நீங்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட் போன்றவற்றை பயன்படுத்தி உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
Freelancing செய்ய படிப்பு/பட்டம் பெற்றிருப்பது அவசியமா?
Freelancing செய்ய எந்த ஒரு படிப்பு அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது உங்கள் திறமையை பொறுத்து செய்யக்கூடிய வேலை ஆகும்.
Freelancing முழுநேர வேலையாக செய்யலாமா?
ஆம் கண்டிப்பாக Freelancing முழு நேர வேலையாக செய்யலாம். ஆனால் நான் உங்களுக்கு பரிந்துரைப்பது நீங்கள் ஆரம்பத்தில் Freelancing பகுதிநேரமாக ஆரம்பித்து. நல்ல வருமானம் வரும் பொழுது நீங்கள் அதனை முழு நேரமாக செய்யலாம்.
Hi, Iam new to this field. Can you support and enhance me
உங்களுக்கு எந்த மாதிரியான விவரங்கள் தேவைப்படுகின்றது. நீங்கள் அவற்றை இங்கு பதிவிடலாம் அதற்கு ஏற்றவாறு நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கின்றேன்.
I want to become a better place in freelancer