வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? 10 சிறந்த வழிகள்

ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? 10 சிறந்த வழிகளை இந்த பதிவில் நாம் காணலாம். வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா? என்று நம்மில் பலர் கேட்கலாம். அதற்கு விடை ஆம் சம்பாதிக்கலாம்.

எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது அவரவர் தனிப்பட்ட திறமையும் அவரவர் முயற்சியையும் பொருத்து மாறுபடுகிறது.
நீங்கள் ஆன்லைனில் இருந்து சம்பாதிக்க விரும்பினால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய திறமைகளை குறிப்பிட்ட துறையில் வளர்த்து கொண்டு பின்னர் அதில் உங்கள் பணியை துவங்கலாம்.

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி
Earn Money Online Tamil

Freelancing – பகுதி நேர வேலை

பிரீலான்ஸிங் (Freelancing) என்பது நமது சேவைகளை (Services) வாடிக்கையாளர்களுக்கு அளித்து அதன் அதன்மூலம் வருவாய் ஈட்டுவது. இது வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க மிகச்சிறந்த வழி.

 பிரீலான்ஸிங் மாணவர்களுக்கு  பகுதி நேர வேலை  செய்து நல்ல வருமானம்  ஈட்ட ஒரு சிறந்த வழியாக இருக்கும். இந்தியாவில் ஒரு பிரீலான்சர் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 20 டாலர்கள் சம்பாதிக்கிறார் இது இந்திய ரூபாயில் 1400 இருக்கும்.

இந்திய அளவில் சுமார் 1.5  கோடி   பிரீலன்சர்கள் உள்ளனர், உலகெங்கிலுமுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வீடியோ எடிட்டிங் (Video Editing), வெப் டிசைனிங்(Web Designing),  கிராபிக் டிசைனிங் (Graphics Designing) என அனைத்து வகையான சேவைகளையும் வழங்கி  நல்ல வருமானம்  பெற்று வருகின்றனர்.

நீங்களும் பிரீலான்ஸிங் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால், முதலில் உங்களால் எந்த சேவையை வழங்க சிறந்த முறையில் வழங்க முடியும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் உங்கள் சேவைகளை upwork.com, freelancer.in  போன்ற வலைத்தளங்களில் பதிவு செய்து வாடிக்கையாளரின் தேவைகளைக்கு  ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

Freelancing மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

Freelancing வழிகாட்டி

Blogging – பிளாக்கிங்

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற கேள்விக்கு ப்ளாகிங் ஒரு மிகச் சிறந்த வழியாக இருக்கும். ப்ளாகிங் (Blogging)  என்பது ஒரு வலைதளம் மூலம் உங்கள் கருத்துக்களை  மற்றவர்களுடன் பகிர்வது. உதாரணத்திற்கு நீங்கள் நாள்தோறும் ஆன்லைனில் படிக்கும் செய்திகள் பிளாக்கிங்-இன் ஒரு வகையே. சமையல் குறிப்பு, கல்வி, பொழுதுபோக்கு, செய்திகள், தொழில்நுட்பம் என அனைத்து தலைப்புகளிலும் கட்டுரை  வடிவில் ப்ளாகில் பதிவிடலாம்.

ப்ளாகிங் மூலம் நீங்கள் தொடர்ச்சியான மற்றும் நிலையான வருமானம் பெற முடியும். பிளாக் தூங்குவதற்கு உங்களிடம் டொமைன் (Domain) மற்றும் ஹோஸ்டிங் (Hosting) தேவைப்படும் . நீங்கள் இலவசமாகப் பிளாக்கிங்  செய்ய விரும்பினால்  blogger.com துவங்கலாம்.

உங்கள் பிளாக்கில் பார்வையாளர்கள் கணிசமான அளவு வரும்போது கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense), சந்தைப்படுத்தல்(Affiliate Marketing), ஸ்பொன்சர்ஷிப் (Sponsorship) போன்ற வழிகளில் உங்கள் ப்ளாகை இலாபகரமான தாக்கலாம் (Earn Money Online Tamil).

Affiliate Marketing – சந்தைப்படுத்தல்

சந்தைப்படுத்தல் (Affiliate Marketing) என்பது  மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் மக்களுக்கு பரிந்துரைத்து, உங்கள் மூலமாக அவர்கள் அந்த தயாரிப்புகளை வாங்கினால் உங்களுக்கு விற்பனைத் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகை கமிஷனாக  உங்களுக்கு வழங்கப்படும்.

  உதாரணத்திற்கு யூடியூபில் மொபைல் போன்களை ரிவியூ (Mobile Phone Review) செய்யும் செய்யும் யூடியூபர்கள் அந்த மொபைல்   போனை வாங்குவதற்கான லிங்கை உங்களுக்கு கொடுப்பார்கள். அந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் மொபைல் போன் வாங்கும்போது ஒரு சிறிய அளவு கமிஷன் அவர்களுக்கும் சென்றடையும்.

இதுவே சந்தைப்படுத்தல் (Affiliate Marketing)  எனப்படும்.  உங்களின் சமூக வலைதள பக்கம், யூடியூப் சேனல், பிளாக் பயன்படுத்தி சந்தைப்படுத்தல் (Affiliate Marketing) செய்து வருமானம் ஈட்டலாம் (Earn Money Online Tamil).

YouTube channel – யூடியூப் சேனல் 

கூகுளுக்கு (Google) அடுத்தபடியாக அதிகமான தேடல்களை (Searches)  பெறும் சர்ச் இன்ஜின்களில் (Search Engine) ஒன்று யூடியூப் (YouTube). யூடியூபில் நாள் ஒன்றுக்கு சுமார் 100+ கோடிக்கும் அதிகமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றது.இதற்கு மிக முக்கிய காரணம்  அதிவேக இன்டர்நெட் பயன்பாடு   உயர்ந்திருப்பதும், மக்கள் படித்து புரிந்து கொள்வதை விட வீடியோ மூலம் சுலபமாக   புரிந்து  கொள்வது மாகும். 

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஒரு நிலையான வருமானம் பெற யூடியூப் சேனல் YouTube Channel)  ஆரம்பிப்பது மிகச் சிறந்த  முடிவாக இருக்கும். ஆரம்பத்தில் கடின உழைப்பும், தரமான பதிவுகள் தொடர் இடைவேளையில் மக்களுக்கு மக்கள் பயன்பெறும் வகையில் இருந்தால் நீங்கள் யூட்யூபில் சுலபமாக வெற்றி அடைய முடியும்.

 உங்கள் யூடியூப் கணக்கை (YouTube Account) தொடங்குவது மிகச் சுலபம் நீங்கள் ஒரு ஜிமெயில் ஐடியை (Gmail) பயன்படுத்தி இலவசமாக  யூடியூப் சேனல் தொடங்கலாம். நீங்கள் வீடியோக்களை Record செய்வது முதல் Editing, Uploading வரை  உங்கள் ஸ்மார்ட் போனிலேயே எளிதாக செய்து கொள்ள முடியும்.

Digital Marketing – டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

ஆன்லைனில் இருந்து நல்ல வருமானம் சம்பாதிக்க மிகச்சிறந்த வழி டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) என்பது தற்போது மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பிராண்டுகள் (Brands) தங்களுடைய தயாரிப்புகளை (Products) விளம்பரப்படுத்த டிஜிட்டல் விளம்பரங்களை பயன்படுத்துகிறது. 

நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை கற்றுக் கொள்வதன் மூலம் இந்த  பிராண்டுகளுக்கு மார்க்கெட்டிங்  செய்து நல்ல வருமானத்தையும் (Earn Money Online Tamil) பெற முடியும். டிஜிட்டல் சந்தைப்படுத்தல்  கற்றுக்கொள்ள கல்லூரிப்படிப்பு பட்டம் (Degree) இருப்பது அவசியம் இல்லை.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல்  கற்றுக்கொள்ள விரும்பினால்  Google Digital  என்ற வலைத்தளத்தில் சென்று இலவசமாக கற்றுக் கொள்ளலாம். இந்த கோர்ஸ்(Course) உடன் உங்களுக்கு  கூகுளின் (Google) சார்பாக சான்றிதழும் (Certificate) வழங்கப்படும்.

Selling Photos Online – புகைப்படங்களை விற்பனை

உங்களுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தால், நீங்கள் DSLR கேமராவை கொண்டு  சிறப்பான புகைப்படங்கள் எடுப்பவராக இருந்தால் உங்களால் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி நல்ல வருமானம் பெற முடியும்.நீங்கள் எடுக்கும் போட்டோக்களை விற்பனை தளத்தில் பதிவிட்டு,அந்த போட்டோக்களை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருவாய் ஈட்டலாம்.

 இதனை ஸ்டாக் போட்டோகிராபி (Stock Photography) என்கின்றோம். ஸ்டாக் போட்டோகிராபியில் மிகப்பிரபலமான வலைத்தளம்  shutterstock.com,இந்த வலைதளத்தை நீங்கள் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உங்களின் வருமானத்தை பெறலாம்

Translation Work – மொழிபெயர்ப்பாளர் வேலை (வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி)

உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால் நீங்கள் மொழிபெயர்ப்பாளர் பணியை தொடங்கலாம். மொழிபெயர்ப்பாளர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா முதலிய நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க  உள்ளூர் மொழிகளிலேயே விளம்பரம் செய்கின்றன.

இதன் காரணமாக சிறந்த மொழிபெயர்ப்பாளர்களின் சேவை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது மொழிபெயர்ப்பாளர் பணியைப் பெற உங்கள் மொழித்திறனை குறிப்பிடும் வகையில்  அந்த மொழியில் பட்டம் பெற்றிருப்பது உங்களுக்கு கூடுதல் நன்மை தரும். 

நீங்கள் யூடியூப்  வீடியோக்களுக்கு சப்டைட்டில் (Subtitles)   அமைக்கும் சேவையை கூட  தொடங்கலாம். நீங்கள் மொழிபெயர்ப்பாளர் பணியை பெற upwork.com, freelancer.in  போன்ற வலைத்தளங்களில் பதிவு போன்ற வலைத்தளங்களில் உங்கள் சேவைகளை பதிவு செய்து வாடிக்கையாளர்களை அணுகலாம்.

Virtual Assistant – மெய்நிகர் உதவியாளர்

மெய்நிகர் உதவியாளர் (c)  வேலை என்பது நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியாகும். தொழிலதிபர்கள் பலர் நேரமின்மை காரணமாக தங்களது தொழில் சம்பந்தமான வேலைகள் சிலவற்றை மெய்நிகர் உதவியாளர் மூலம் செய்வதுண்டு. 

 ஒரு மெய்நிகர் உதவியாளரின் வேலை என்னவென்றால் ஒப்பந்ததாருடைய இமெயில்களை (Email)  பராமரிப்பது அவருக்காக பிசினஸ் கால்களை அட்டென்ட் ( Attending Business Calls ) செய்வது மெசேஜ்க்கு ரிப்ளை ( Reply Messages செய்வது அவருடைய சமூக வலைத்தளங்களை (Social Media)  பார்த்துக் கொள்வது போன்ற வேலைகள் வழங்கப்படுகிறது . இந்த வேலைகளில் ஒப்பந்ததாரர் இன் தேவைகளுக்கும் மெய்நிகர் உதவியாளரின் திறமைக்கு ஏற்றார்போல மாறுபடலாம்.

நீங்கள் மெய்நிகர் உதவியாளர் ஆக பணிபுரிய ஆங்கில அறிவும் கணினியை இயக்க கூடிய திறமையும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
மெய்நிகர் உதவியாளர் ( Virtual Assistant )  வேலை பெற நீங்கள் upwork.com, freelancer.in  போன்ற வலைத்தளங்களில் சென்று உங்கள் திறமைகளைப் பதிவு செய்து  வாடிக்கையாளர்களுக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

Social Media Influencer – சமூக வலைதள செல்வாக்கு மிகுந்தவர்

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில்  5 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள்  (Followers) பெற்றிருந்தால் சமூக வலைதள செல்வாக்கு மிகுந்தவர் (Social Media Influencer)  என கருதப்படுகிறது.  நீங்கள் உங்கள் சமூக வலைதள செல்வாக்கை பயன்படுத்தி  நல்ல வருமானம் பெற முடியும்.

இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட தங்கள் தயாரிப்புகளை (Products) மக்களிடம் விளம்பரப்படுத்த சமூகவலைத்தள செல்வாக்கு மிகுந்த அவர்களையே (Social Media Influencer) அதிகமாக பயன்படுத்துகின்றனர் , இந்த ஸ்பான்சர்ஷிப் (Sponsorship)  மூலமாக அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.

நீங்களும் உங்க சமூக வலைதள பக்கங்களில் சிறந்த பதிவுகளை பகிர்ந்து  பின்தொடர்பவர்களை அதிகரித்துக் உங்கள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Audiobooks – ஆடியோ புத்தகங்கள்

புத்தகங்கள் வாசிப்பது என்பது தலைச்சிறந்த பண்புகளில் ஒன்று.   இன்றைய பரபரப்பான உலகில் புத்தகம் வாசிக்க நேரம் இருப்பதில்லை. இந்நிலையில் தற்போது புத்தகங்கள்  வாசித்து ஆடியோ வடிவில்  ஆடியோ வடிவில் பதிவு  பதிவு செய்வதன் மூலம் மக்கள் தம் அன்றாட வேலைகளை செய்து கொண்டே புத்தகத்தை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். 

 இது சுலபமானதாகவும் அவர்களின் நேரத்தை சேமிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ  புத்தகங்களின்  முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் ஒரு நல்ல பேச்சாளராக இருந்தால், நீங்களும் புத்தகங்களை வாசித்து ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வலைதளங்களில் பதிவிடலாம், அதன் மூலம் நல்ல வருவாயை ஈட்ட முடியும். நல்ல புத்தகங்களை வாசிப்பது மக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். 

முடிவுரை

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? 10 சிறந்த வழிகள் பற்றி பார்த்தோம். இந்த வழிகளில்  உங்களுக்கு ஏற்ற வேலை எது என்பதை நீங்கள் முடிவு எடுத்து பின்னர் அந்தத்துறையில் உங்கள் திறமைகளை (Skills)  வளர்த்துக்கொண்டு உங்கள் ஆன்லைன் வெற்றிப் பயணத்தை தொடரலாம்.

ஆரம்பத்தில் நீங்கள் இந்த ஆன்லைன் வேலைகள் உங்கள் பகுதி நேர வேலையாக செய்யலாம், பின்னர் அதிலிருந்து நல்ல வருமானம் பெறும் போது அதை முழுநேரமாக கூட மாற்றிக்கொள்ளலாம்.

உழைப்பு, விடாமுயற்சி இவ்விரண்டையும் கொண்டு நீங்கள் ஆன்லைன் உலகில் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.